Quit Congress
Quit BJP
குலதெய்வம் கொடைத் திருவிழா
தோட்டலாம்பட்டி கிராமத்தில், ஆலமரத்தின் கீழே ஐய்யனார்.
மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்திலிருந்து வந்தவர் ஒருவர், அருகில் உள்ள பம்ப்செட்டில், ஆசைதீர குளித்துவிட்டு, ஈர வேட்டியை இடுப்பிலே கட்டிக்கிட்டு, ஈர துண்டை தோளில் போட்டுக்கிட்டு, சாமி கும்பிட உள்ளே போகிறார்.
கால் தடுமாறுகின்றது. மூச்சு பெருமூச்சாக வெளிவருகிறது. உடம்பெல்லாம் விரைத்து ஆடுகின்றது.
"ஐயா, பூசாரி ஐயா, ஓடியாங்க. ஐய்யனார் வந்திருக்காரு."
பூசாரி, பிடித்துக்கொண்டிருந்த சுருட்டை தூக்கி எறிந்துவிட்டு ஓடிவருகிறார்.
"தள்ளுங்க. தள்ளுங்க. எடு அந்த விபூதி தட்டை."
கொஞ்சம் விபுதியை எடுத்து, தலையில் தெளித்துவிட்டு, நெற்றியில் பூசுகிறார். ஆனாலும், ஐய்யனார் அடங்க மறுக்கிறார்.
பூசாரி ஓங்கி குரல் கொடுத்துக் கொண்டே, ஐய்யனாருக்கு ஈடு இணையாக ஆடிக்கொண்டே, பூசாரி ஐய்யனாருக்கு ஆணை ஈடுகிறார்.
"சொல்ல வேண்டியதை சொல்லு. என்ன தயக்கம். யாருக்கும் பயப்பட தேவையில்லை. பயப்படாமல், மனசிலே பட்டதை சொல்லிட்டு, மலையேறு."
ஐய்யனார், ஆவேசமாக, சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி விடுகிறார்.
பூசாரி, சொம்பு நிறைய தண்ணிர் எடுத்துக் கொடுத்து, குடிக்கச் சொல்கிறார். தண்ணி குடிக்க குடிக்க, ஐய்யனார் போய், அந்த மனிதர் அசந்து, அங்கேயே அமைதியாகி, அமர்ந்து விடுகிறார்.
கொஞ்ச நேரம் கழிச்சு வெளியேவந்து, கறியும் சோறும் சாப்பிட்டுவிட்டு, ஆலமரத்தடியில் துண்டை விரித்துப்போட்டு, படுத்து தூங்கி விடுகிறார்.
"இவரு, உள்ளே, சாமி ஆடியவர் தானே."
"ஆமாம், அவரேதான். மஞ்சநாயக்கன்பட்டிக்காரர்."
"பேரு என்ன?"
"எல்லோரும், துரை சாமின்னு கூப்பிடுவாங்க. இராம துரையோ, அண்ணா துரையோ, தம்பி துரையோ"
"அண்ணா துரை, தம்பி துரை மேலேதானேவந்து, அருள்வாக்கு வழங்குவார்."
"எப்பவும், அமைதியா இருக்கிற ஆளு. எப்பவாவது, சாமி வந்து, அருள்வாக்கு வழங்குவார்."
"எப்பவாவது வந்தாதான், சாமி. எப்பவும் இருந்தா, அது பேய்."
ஆக, அது அண்ணா துரையின் அருள் வாக்கு.
"பொதி சுமக்க, நாங்க கழுதைகளா"
அது தம்பி துரை இல்லே; அது அண்ணா துரை.
கருணாநிதி அருள்வாக்கு என்றால், அது அவுங்களுக்கு.
ஜெயலலிதா, எம்ஜிஆர் அருள்வாக்கு என்றால், அது இவுங்களுக்கு.
அண்ணாதுரை அருள்வாக்கு என்றால், அது எல்லோருக்கும் தானே.
எல்லாம் கேள்வி கேட்பார்கள்; உயிரோடு இருக்கும்போது, சாமியா, பூதமா என்று.
செத்தபிறகு, தன் தம்பிகளை காப்பாற்ற, துடியா துடிச்சு,
அண்ணா, தம்பி மேலே வந்திறங்கி, அருள்வாக்கு அளிப்பார்.
இப்ப, இராமசாமி, நம்மை, தன் கைத்தடியாலேயே, அடிக்கப் போகின்றார்.
மக்களவையின் சபாநாயகர், சுமத்திராஜி, பாசத்தோடும், பரிவோடும்,
"தம்பித்துறைஜீ, யே க்யா ஹை. ஹம் கோ போல்தீஜியே."
No comments:
Post a Comment