மெண்டல் இந்தியா
பழைய ஏபி நாகராஜன் புராண திரைப்படத்தில், பக்தன் ஒருத்தர் தவம் செய்வார். அவரது கடும் தவத்தினைக் கண்டு, உருகி, சிவபெருமான், கைலாசத்திலிருந்து இறங்கிவந்து, பக்தனின் தவத்தை மெச்சி, உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்பார்.பக்தன், "ஐய்யனே, எனக்கு டிவ்விட்டர் வேண்டும்."
சிவபெருமான், "அப்படியே ஆகட்டும். டிவ்விட்டர் மூலம், இப்பூவுலகுக்கு நன்மை செய்வாயாக."
பக்தனுக்கு வரம் அருளிவிட்டு, சிவபெருமான், அவரது குடும்ப பிரச்சனை, மாம்பழப் பிரச்சனை என்று திருவிளையாடலில் பிஸியாகி விட்டார்.
ஆரம்ப காலகட்டத்தில், பக்தன், டிவ்விட்டர் மூலம், மக்களுக்கு நன்மை செய்யும் செயலில் ஈடுபட்டான். பிறகு, அசூர வளர்ச்சி; கால், தரையில் படவில்லை; தானே கடவுள் என்றாகி விட்டான்.
அவென் வளர்ந்த ஊரிலே, எடுத்துச் சொல்வதற்க்கு ஆளில்லை.
நிலை உயரும்போது, பணிவு கொண்டால்,
உயிர்கள் உன்னிடம் மயங்கும்.
பணிவு; நிதானம்; அவனை வளர்த்துவிட்ட ஆர்.எஸ்.எஸை குறைச்சொல்லவா; அத்வானியை குறைச் சொல்லவா.
இப்படி ஒரு பக்தனை உருவாக்கிவிட்ட, அத்வானியை, அந்த அயோத்தியா இராமன் மன்னிக்கவே மாட்டான்.
வளர்ச்சி; அசூர வளர்ச்சி. தேவையோ; தேவையில்லையோ; கண்மூடித்தனமான வளர்ச்சி.
இயற்கையின் நியதி என்னவென்றால்; மேலே போவதெல்லாம், கீழே வந்திறங்கும்.
கொடுமை என்னவென்றால்; எவ்வளவு வேகமாக மேலே போறேயோ, அதைவிட பன்மடங்கு அதிவேகமான வீழ்ச்சி இருக்கும்.
பக்தன், அசூரன் ஆனபிறகு, இந்திரன், சந்திரன், மற்ற தேவர்கள் அனைவரும், சிவபெருமானிடம் வந்து, கதறி அழுது, காப்பாற்றுங்கள், என்று வேண்டுவார்கள்.
இராமசாமி ஒருத்தர்மட்டும், சிவபெருமானை கேப்பார்;
என்னையா கடவுள் நீ;
அவன், பக்தனா, அசூரனா என்று அறியாத நீ எல்லாம் ஒரு கடவுளா.
அதுக்கு, சிவபெருமான்;
பெரியவரே, நான் மட்டும் கடவுள் இல்லை;
சர்வ அதிகாரம் கொண்ட ஒரே கடவுள், நான் இல்லை.
அதிகாரங்களும், பொறுப்புகளும், மிகச்செவ்வனே வகுத்து வழங்கப்பட்டு இருக்கின்றது.
பிரம்மா, ஆக்கும் கடவுள்.
விஷ்ணு, காக்கும் கடவுள்.
சிவன், அழிக்கும் கடவுள்.
Clear separation of power; very well balanced; checks and balances are in place.
சாதரண பக்தனுக்கு, டிவ்விட்டர் என்ற அசூர பலத்தினை கொடுத்துவிட்டு, இப்ப எப்படி அந்த அசூரனை அழிக்கப் போறே.
டிவ்விட்டரே; ஆக்கும் சக்தி.
டிவ்விட்டரே; அழிக்கும் சக்தி.
இராமசாமி, "எதுக்கு இந்த வெங்காய திருவிளையாடல்."
சிவபெருமான், "திருவிளையாடல் இல்லையென்றால், மக்களுக்கு போரடித்து விடும், வாழ்க்கை."
____________________________________
No comments:
Post a Comment