Sunday, December 9, 2018

NULL caste system in India.


SELECT COUNT(*) FROM INDIA WHERE caste IS NULL;

போயஸ் கார்டன். ரஜினிகாந்த் வீடு.

"ரஞ்சித் லைன்லே; உங்ககிட்டே பேசணுமா."

"மகிழ்ச்சி, ரஞ்சித்!"

"மிக்க மகிழ்ச்சி, சார்."

"பேட்ட முடிஞ்ருச்சு. நாம அடுத்த படம் பண்ணலாமா?"

"நிச்சயம் சார். ஆனா, வேற ஒரு விஷயத்துக்காக போன் செய்தேன்."

"அப்படியா; சொல்லுங்க ரஞ்சித்."

"அரசியல் சம்பந்தமாக, உங்ககிட்டே பேசணும்."

"பேசலாமே; ஆனா, இப்ப வேணாம்; மனசு ஒரே பதட்டமா இருக்கு."

"என்ன சார்; ஏன் பதட்டம்?"

"அடுத்த வாரம் 2 பாயிண்ட் ஓ ரிலிஸ்லே."

"சங்கரும் நீங்களும் சேர்ந்தா, பயங்கர வெற்றி தான் சார்."

"அதனாலே அப்புறமா பேசலாமே"

"அம்பேத்கார் நினைவுநாள் வருது; அதுக்கு முன்னே, நாம சந்தித்து பேசினால், நல்லா இருக்கும்."

"டிஸம்பர் முதல் வாரத்திலே, மண்டபத்துக்கு வந்துருங்க; அங்க நாம பேசலாம்."


டிஸம்பர் முதல்வாரம்; கோடம்பாக்கம் இராகவேந்திரா கல்யாண மண்டபத்தில்:

"அம்பேத்கர் விட்டுச்சென்ற பணியை, தொடர்ந்து செய்ய யாரும் இல்லை சார்."

"என்ன அப்படி சொல்றீங்க; தமிழ்நாட்டிலே, நிறைய பேர், செஞ்சிக்கிட்டு தானே இருக்காங்க."

"அவுங்க எல்லாரும், பொதுக்கட்சியுடன் இணைந்து செயல் ஆற்றுகின்றார்கள். அதிலே, ரொம்ப கஷ்டம்; சிக்கல்; சுதந்திரமாக செயல் ஆற்ற இயலவில்லை."

"மத்தகட்சிகளோடு இணைந்து செயல்படுவது தானே, நடைமுறைக்கு சாத்தியமானது."

"எதுக்கு சார், நாங்க, மத்தவங்களுக்கு பல்லக்கு தூக்கணும்."

"பல்லக்கு தூக்கிட்டுபோனாத்தானே, சரியான நேரத்திலே, கவிழ்க்க முடியும்."

"இவுங்க யாரும், அந்த அளவுக்கு மனதைரியம் கிடையாது சார்."

"கொஞ்ச நாள், இந்த பல்லக்கை தூக்குறாங்க; பிறகு, அங்கபோய் பல்லக்கு தூக்குறாங்க"

"அதான் சார். இனி நாம யாருக்கும் பல்லக்கு தூக்கப்போவதில்லை."

"அப்புறம், என்ன செய்யப் போறீங்க."

"அம்பேத்கரும், அரசியல் சாசனமும், எங்களுக்கு அளித்திருக்கின்ற உரிமையை, முறையாக பயன்படுத்தி, ஆட்சி அதிகாரத்தில், எங்களுக்கு உள்ள பங்கை, மீட்டு எடுக்கப் போகிறோம்."

"சபாஷ்."

மனிதா உன் எண்ணத்தில் எந்நாளும் நன்நாளாம்;
மறு நாளை எண்ணாதே, இந்நாளே பொன் நாளாம்;

பல்லாக்கை தூக்காதே, பல்லாக்கில் நீ ஏறு;
தப்பென்ன சரி என்ன, எப்போதும் விளையாடு;

அப்பாவி என்பார்கள், தப்பாக நினைக்காதே;
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே...


"பல்லாக்கை தூக்காதே; பல்லாக்கில் நீ ஏறு"

"பல்லக்கை தூக்கவும் வேண்டாம்; நேரம்பார்த்து தள்ளிவிடவும் வேண்டாம்.
நமக்கு உள்ள நேர்வழியில், பயணத்தை தொடருவோம்."

"எப்படி?"

"எங்க கட்சிகளை எல்லாம் ஒன்றாக இணைத்து,
அப்படி ஒரு கூட்டணி அமைச்சு, தேர்தலை சந்திப்போம்."

"நல்ல யோசனை; உங்க கட்சிகள் ஏத்துக்குவாங்களா?"

"கூஜாவும், சொம்பும் தூக்கி, தூக்கி, தூக்கு தூக்கியாகவே ஆகிவிட்டார்கள்."

"அப்ப என்ன செய்யப் போறீங்க."

"நான் என்ன சார் பண்ண முடியும்; நான் என்ன புதுக்கட்சியா ஆரம்பிக்க முடியும்."

"கட்சி தேவையில்லை."

"எங்களுக்குன்னு, தனித்தொகுதி ஏழு இருக்கு."

"ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பது, மிகப் பெரிய விஷயம்."

"கட்சித் தலைவர்க கிட்டே, பேசிப் பார்த்துட்டேன் சார்;
அவுங்க சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்காங்க."

"மக்கள்க கிட்டே பேசுங்க."

"பேசுறேன் சார்; மக்களிடம் பேசுறேன்."

"மக்கள், தலைவர்களிடம், பல்லக்கு தூக்க வேண்டாம் என்று எடுத்துச் சொல்வார்கள்."

"எடுத்துச் சொன்னாலும், அவுங்க கேக்கமாட்டாங்க சார்."

"அப்ப, நீங்களே நில்லுங்க."

"கட்சி இல்லை; கொடி இல்லை; தேர்தல் சின்னம் இல்லை."

"எதுவும் தேவையில்லை."

"அதெப்படி சார்."

"இந்த காலத்திலே, எல்லோரும் படிச்சவங்க;
வேட்பாளர் பெயரைப் படிச்சுப் பார்த்து ஓட்டு போடுவாங்க."

"அப்ப, சுயேச்சையாக தேர்தலில் நிக்கலாம், எங்கீங்களா?"

"அம்பேத்கர் அமைத்த அரசியல் சாசனம் அப்படித்தான் சொல்லுது."

"ஜெயிச்சு காண்பிக்கிறோம் சார்; ஏழும் எங்களுக்கே."

"தமிழகத்தில் இருந்து ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பது, மிகப் பெரிய சாதனை."

"அது நடக்கும் சார்; அந்த நம்பிக்கையிலேதானே, நான் பேசுறேன்."

"ஏழு பேரை வைச்சு, என்னப் பண்ணப் போறீங்க."

"என்ன சார்; இதுவே பெரிய சாதனை."

"சாதனை என்பது, கஷ்டப்பட்டு சாதிக்கிறது; மிக இலவாக ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களை உங்கள் சார்பில் அணுப்புவது எப்படி சாதனை ஆகும்."

"என்ன சார் பண்றது?"

"நீங்க பட்ட; நீங்க படுகின்ற துயரம் தானே, மத்தவங்களும் படுவார்கள்."

"ஆமா சார்; அதுக்குத்தானே, தமிழகம் முழுவதிலும் இருந்து ஏழு பேர்."

"தமிழகத்தைத் தாண்டி..."

"சார், நான் சாதரண ரஞ்சித்; அம்பேத்கர் இல்லை."

"அம்பேத்கர் அப்படி நினைத்திருந்தால், அவரது செயல்; அந்த செயலின் பலன்; அனைத்தும் மஹாராஷ்டிரத்துக்குள்ளேயே மறைந்து போய் இருக்கும்."

"உண்மைதான் சார்."

"தமிழகத்திலே பிறந்து வளர்ந்த உனக்கு, அம்பேத்கர், யார் என்றே தெரியாமல் போயிருக்கும்."

"சார்; அது ரொம்ப கடினம் சார்."

"உன்னால் முடியும் ரஞ்சித்."

"அப்படி நடந்தால், அது மாபெரும் சாதனையாகவே அமையும், சார்."

"எப்படி சொல்றே?"

"வெறும் ஏழு இல்லே சார்; எண்பத்தி நாலு"

"என்ன எண்பத்தி நாலு?"

"வெறும் எண்பத்தி நாலு இல்லே சார்; நாற்பத்தி ஏழு"

"என்ன சொல்றான், இவன்?"

அருகில் இருந்த உதவியாளர், ரஜினிகாந்துக்கு எடுத்துரைதார்.

இந்திய பாராளுமன்றத்தில்,
தனித் தொகுதிகள் 84 SC 47 ST.
ஆக, மொத்தம், 131 தொகுதிகள்.

"நம்பிக்கை பொறந்திடுச்சு சார்; தனித் தொகுதிகள்,
வேறு எந்த கட்சிக்கும் இல்லை சார்; எங்களுக்கு மட்டுமே"

"சர்தார் வல்லபாய் பட்டேல், உடைஞ்சு கிடந்த இந்தியாவை ஒருங்கிணைத்தார்.
பாபசாஹிப் அம்பேத்கர், பல்வேறு சாதிகளையும்; பழங்குடி மக்களையும், பட்டியலுக்குள் அடக்கி விட்டார்."

Politically, in India, there are only a few types of caste system:
  • Forward
  • Backward
  • Most Backward
  • Scheduled Caste
  • Scheduled Tribe
In the birth certificate itself, just register what type of caste system; 
no need to register the actual caste.

In this way, we could politically eliminate the multiple divisions in the name of caste.

Thousands of caste could be reduced to FIVE types of caste system.

Could we improve it further?

Yes. We could replace the Forward; they don't seek any benefits from the government.

But we need to count the numbers; we could replace FORWARD with NULL

Politically, in India, there are only a few types of caste system:
  • NULL
  • Backward
  • Most Backward
  • Scheduled Caste
  • Scheduled Tribe
Could we improve it any further?

We could combine Scheduled Caste and Scheduled Tribe

Politically, in India, there are only a few types of caste system:
  • NULL
  • Backward
  • Most Backward
  • Scheduled Caste Type
Any further improvement?

We could combine Backward and Most Backward.

combine into what?

Perhaps, Non-Scheduled Caste Type
Politically, in India, there are only a few types of caste system:
  • NULL
  • Non-Scheduled Caste Type
  • Scheduled Caste Type
Our goal is to achieve a NULL caste system in India.

ரஞ்சித், இராகவேந்திர மண்டபத்தை விட்டு வெளியே வந்தவுடன்,
அவரது நண்பர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

தென்னாட்டு அம்பேத்கர்!
ரஞ்சித் வாழ்க !!

ரஞ்சித், சினம்கொண்டு, தென்னாட்டு அம்பேத்கர் என்றால்,
எப்படி 131 பாராளுமன்ற உறுப்பினர்களை அடைவது.

அம்பேத்கர், அம்பேத்கர் தான்;
ரஞ்சித், ரஞ்சித் தான்.

அம்பேத்கர் விட்டுச்சென்ற பணியினை,
தொடர்ந்து எடுத்துச் செல்லும் ரஞ்சித்!
வாழ்க! வாழ்கவே!!

எனக்கு பல்லக்கு வேண்டாம்;
நான் யாருக்கும் பல்லக்கு தூக்க மாட்டேன்.
நீயும், யாருக்கும் பல்லக்கு தூக்காதே.

In practice, out of 543 constituencies represented in the Lok Sabha,
the lower house of India's parliament,
85 (15.47%) are reserved for SC and
48 (8.66%) are reserved for ST.

You have 132 Lok Sabha seats.
24.13% have the power.
Go for it!

#casteIsNULL

No comments:

Post a Comment